1st T20: SLvNZ; நியூசிலாந்து 5 விக்கெட்டுகளால் வெற்றி

1st T20: SLvNZ; நியூசிலாந்து 5 விக்கெட்டுகளால் வெற்றி-1st T20-SLvNZ-NZ Won by 5 Wickets-Lasith Malinga Breaks Shahid Afridi's Record

அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் மாலிங்க

நியூசிலாந்து அணியுடன் பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றையதினம் (01) இரவு நேர போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததோடு, நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும், இசுறு உதான ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் அவ்வணியின் தலைவர் ரிம் செளதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

175 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, சிறப்பாக விளையாடி, இறுதி ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

நியூசிலாந்து அணி சார்பில் ரொஸ் டெய்லர் 48 ஓட்டங்களையும், கொலின் டி கிராண்ட்ஹோம் 44 ஓட்டங்களையும், டெரில் மிச்சல் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் லசித் மாலிங்க மற்றும் வணிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா 2  விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தனர்.

1st T20: SLvNZ; நியூசிலாந்து 5 விக்கெட்டுகளால் வெற்றி-1st T20-SLvNZ-NZ Won by 5 Wickets-Lasith Malinga Breaks Shahid Afridi's Record

அதற்கமைய, சர்வதேச ரி20 போட்டிகளில் 99 விக்கெட்டுகள் எனும் இலக்கை லசித் மாலிங்க இப்போட்டியில் அடைந்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஓய்வு பெற்ற பாகிஸ்தான் வீரர் சஹீட் அப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ளார். சஹீட் அப்ரிடி 98 விக்கெட்டுகளையும் அதற்கு அடுத்தபடியாக பங்களாதேஷ் அணியின் சகீப் அல் ஹசன் 88 விக்கெட்டுகளையும், பாகிஸ்தானின் உமர் குல் 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அந்த வகையில் 19.3 ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் நாயகனாக ரொஸ் டெய்லர் தெரிவானார்.

இலங்கை 174/4 (20.0)
குசல் மெண்டிஸ் 79 (53)
நிரோஷன் திக்வெல்ல 33 (25)

ரிம் சௌதி 2/20 (4.0)
மிச்சேல் சான்ட்னர் 1/22 (4.0)

நியூசிலாந்து 175/5 (19.3)
ரொஸ் டெய்லர் 48 (29)
கொலின் டி கிராண்ட்ஹோம் 44 (28)

வணிந்து ஹசரங்க 2/21 (4.0)
லசித் மாலிங்க 2/23 (4.0)

ஆட்ட நாயகன்: ரொஸ் டெய்லர்

Sun, 09/01/2019 - 22:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை