நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 13 பேருக்கு எதிராக 7,573 குற்றச்சாட்டுக்கள்

கோதுமை மாவினை பழைய விலைக்ேக  விற்பனை செய்ய வர்த்தகர்கள் இணக்கம்

எவன்கார்ட் வழக்கு

பக்கம் 03

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் நேற்று (10) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

எவன் கார்ட் வழக்கை விசாரணை செய்யும் மூவரடங்கிய விஷேட நீதிமன்றத்தில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்தமை உட்பட 7,573 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எவன் கார்ட் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட மேல் நீதிமன்றமொன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர்,பிரதம நீதியரசரை கோரியிருந்தார்.இதன் படி நியமிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கனேவல்பொல ,ஆதித்ய பட்டபெந்தி மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோர் முன்னிலையில் எவன்கார்ட் மோசடி தொடர்பான வழங்கு நேற்று ஆராயப்பட்டது.

இதன் ​போது,எவன் கார்ட் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி,ரத்னா லங்கா நிறுவனத்தின் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பியாசிறி பெர்னாண்டோ அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் கருணாரத்ன பண்டா அதிகாரி எகொடவெல, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவி செயலாளர் சமன் திசாநாயக்க, கப்பலின் கேப்டனாக இருந்த உக்ரேன் நாட்டவரான டென்னடி கிராப்ரோ ரெபிலிரோ, ரத்ன லங்கா நிறுவனத்தின் தலைவராக பணியாற்றிய விக்டர் சமரவீர,

பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன, தொன் அல்பஸ் திலகரத்ன, விசுருஜித் நந்தன லியனகே, நிருபல் த கொஸ்தா, ரத்னா லங்கா முன்னாள் பொதுமுகாமையாளர் பொன்னுதுறை பாலசுப்ரமணியம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராகவே சட்டமா அதிபர் குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்தார்.

ரத்னா லங்கா நிறுவனம் மற்றும் எவன் கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறுவனம் ஆகியவை குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி, எவன் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் தன்னியக்க துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எவன் கார்ட் கப்பலில் 816 தன்னியக்க துப்பாக்கிகளும் 2,02,935 துப்பாக்கி ​ரவைகளும் காணப்பட்டமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை நீதித்துறை வரலாற்றில் அதிகளவான குற்றப்பத்திரிகைகள் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இது வென்பது குறிப்பிடத் தக்கது.

Wed, 09/11/2019 - 06:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை