ஹால்தென்ன ஆலயத்தில் கொள்ளையிட்ட 12 கிலோ தங்க நகைகள் மீட்பு

கொள்ளையர்கள் 4 பேர் கைது

கண்டி, தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹால்தென்ன பிரதேசத்திலுள்ள ஆலயத்தில் கொள்ளையிடப்பட்ட சுமார் 12 கிலோ தங்க நகைகள் நேற்று அதிகாலை மீட்கப்பட்டதாகவும் கொள்ளையர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேக்கர தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இவ் ஆலயத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 3.45 மணிளவில் புகுந்த ஆறு கொள்ளையர்கள் அங்கிருந்த பிரதான பூசகர் மற்றும் சேவை செய்தவர்களை மிரட்டி கை, கால்களை கட்டி வைத்துவிட்டு நான்கு இலட்சம் ரூபா பணமும் மாணிக்கக் கற்களுடன் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ தங்க நகைகளையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றனர்.

இக் கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட் விசாரணையில் வீதியின் இருபுறமும் இருந்த சீ.சீ.ரி.வி கமராக்களும் பரிசோதிக்கப்பட்டு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சந்தேக நபர்கள் வந்த முச்சக்கரவண்டியையும் பொலிஸார் கைப்பற்றினர். முச்சக்கர வண்டியை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொள்ளையர்களில் நால்வரை பொலிஸார் கைதுசெய்தனர்.

கலஹா குறூப் நிருபர்

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை