அரசாங்க வீடு பெற சீனாவில் 11 உறவினர் 23 தடவை திருமணம்

சீனாவில் அரசாங்கத்தை ஏமாற்றி வீடுகளைப் பெற 11 உறவினர்கள் ஒரே மாதத்தில் தங்களுக்குள் 23 முறை திருமணமும் விவாகரத்தும் செய்துகொண்டுள்ளனர்.

சிச்சியாங் வட்டாரத்தில் மேம்பாட்டுப் பணிக்காக வீடுகள் தகர்க்கப்பட்டன. அதற்குப் பதிலாக அவ்வட்டாரவாசிகளுக்கு 40 சதுரமீற்றர் வீடுகளை அரசாங்கம் கொடுத்தது.

பான் என்பவரும் அவருடைய குடும்பத்தாரும் அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். பான் தம்முடைய முன்னாள் மனைவியான ஷியை மீண்டும் திருமணம் செய்துகொண்டார்.

பாதிக்கப்பட்ட வட்டாரத்தில் வசிப்பதாக ஷி பதிவுசெய்யப்பட்டிருந்ததால் இதன்வழி பானுக்குக் குடியிருக்கும் அனுமதி கிடைத்தது.

ஆறு நாட்களுக்குப் பின் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 15 நாட்களுக்குப் பின் பான் தம்முடைய அண்ணியைத் திருமணம் செய்து விவாகரத்து செய்தார். பின் அண்ணியின் சகோதரியையும் அவ்வாறு செய்தார். அதேவேளையில் ஷி மற்றுமொரு முன்னாள் கணவரை மணந்தார். இப்படி அந்தக் குடும்பத்தினர் மொத்தம் 23 திருமணங்களிலும் விவாகரத்திலும் ஈடுபட்டதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை