சிடிபி அனுசரணையில் மூன்றாவது MCA திறந்த கிரிக்கெட் “சிக்சஸ்” -2019 போட்டி

இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி, தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாக, MCA திறந்த கிரிக்கெட் “சிக்சஸ்” போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

இந்த போட்டித் தொடர் வருடாந்தம் மேர்கன்டைல் கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. கடந்த 30 வருட காலமாக இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் கிரிக்கெட் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. 50 க்கும் அதிகமான அணிகள் Tier A மற்றும் Tier B பிரிவுகளில் பங்கேற்கின்றன. Tier A போட்டிகள் MCA மற்றும் கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானங்களில் இடம்பெறும். ஒன்பது அணிகள் ஒவ்வொரு மைதானங்களில் விளையாடும். Tier B இல் 12 அணிகள் பங்கேற்பதுடன், இந்த போட்டிகள் MCA, டிஎஸ் சேனநாயக்க, வெஸ்லி மற்றும் மத்தேகொட மைதானங்களில் இடம்பெறும். 2019 கடந்த 30 ஆம் திகதி இந்த போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

இறுதிப் போட்டி MCA மைதானத்தில் 2019 செப்டெம்பர் 1ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், இதனைத் தொடர்ந்து பரிசளிப்பும் இடம்பெறும். Tier A மற்றும் Tier B பிரிவுகளைச் சேர்ந்த அணிகள் மற்றும் தனிநபர்களுக்கு கிண்ணங்கள் பரிசளிக்கப்படும், இதில் சம்பியன் மற்றும் இரண்டாமிடத்துக்கு தெரிவாவோருக்கான கிண்ணங்களும் அடங்கியிருக்கும். மேலும், ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து விசேட விருதுகள் வழங்கப்படும் என்பதுடன், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்து வீச்சாளர், அதிக ஆறு ஓட்டங்களை குவித்தவர், போட்டி நாயகன் மற்றும் போட்டித் தொடர் நாயகன் போன்ற விருதுகளும் அடங்கியிருக்கும்.

அனுசரணை காசோலையை கையளிக்கும் நிகழ்வு மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு MCA இல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில், CDB இன் பணிப்பாளரும், பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியும், பிரதம நிதி அதிகாரியுமான தமித் தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். CDB இன் விற்பனை மற்றும் வணிக அபிவிருத்தி பணிப்பாளர் சசிந்திர முனசிங்க சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். MCA இன் தலைவர் ரொஷான் இத்தமல்கொட கருத்துத் தெரிவிக்கையில், “CDB மற்றும் MCA இடையிலான ஒன்றிணைவு தற்போது மூன்றாவது ஆண்டாகவும் முன்னெடுக்கப்படுவதுடன், இதுவரையில் போட்டித் தொடருக்கு பெருமளவு தனிநபர்களை உள்வாங்கியுள்ளது. இந்தப் போட்டித் தொடரினுௗடாக தேசத்துக்காக பெருமளவு இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கப்பட்டுள்ளதுடன், சிறந்த குழு நிலை செயற்பாடு, விளையாட்டுத் திறன் போன்றவற்றை கட்டியெழுப்பியுள்ளது.” என்றார்.

இளம் திறமையாளர்களை உயர்ந்த நிலைக்கு கட்டியெழுப்பும் தமது அர்ப்பணிப்பை CDB இன் அனுசரணை மேலும் உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் CDB பிரதி பொது முகாமையாளர் தர்ஷன ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இளம் திறமைசாலிகளை கட்டியெழுப்புவதில் CDB நம்பிக்கை கொண்டுள்ளது. இள வயதினர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த கட்டமைப்பாக இது அமைந்துள்ளதாக நாம் கருதுகின்றோம். இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை அனைவரும் விரும்பி பின்பற்றுகின்றனர், இதுபோன்ற போட்டிகள் இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவித்துள்ளதுடன், சர்வதேச மட்டத்தில் அவர்கள் பிரகாசிப்பதற்கு வழிகோலியுள்ளன. 2019 ஆம் போட்டிகள் தொடர்பில் CDB பெருமளவு எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளதுடன், இந்த ஆண்டில் இடம்பெறும் போட்டிகள் வெற்றிகரமானதாக அமைந்திருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றது.” என்றார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் MCA அனுசரணை கழகத்தின் தலைவர், உபதலைவர் நளின் விக்ரமசிங்க, பொதுச் செயலாளர் மஹேஷ் டி அல்விஸ் மற்றும் போட்டி கழகத்தின் தலைவர் சுஜீவ டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Sat, 08/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை