ICBTஇன் இரண்டாவது ரக்பி 7S போட்டிகள் ரோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பம்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான

முன்னணி தனியார் உயர் கல்விசேவை வழங்குநரான ICBT ரக்பி செவன்ஸ் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியாளர் மாநாடு கடந்த 13ஆம் திகதி ICBT கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் ICBT கல்லுௗரியின் தலைவர் டொக்டர் ஜகத் அல்விஸ், இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவர் லசித குணரட்ன, இலங்கை ரக்பியின் அங்கத்தவரும், முன்னாள் நடுவருமான தில்ரோய் பெர்னாண்டோ ஆகியோர் உரையாற்றினர்.

கடந்தாண்டு வெற்றிகரமாக இப்போட்டி முன்னெடுக்கப்பட்டதைப்போலவே, இவ்வாண்டும் சிறப்பாக இப்போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ICBT ரக்பி செவன்ஸ் போட்டிகளில் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 12 அணிகள் போட்டியிடுகின்றன. மாணவர்களுக்கு தமது பல்கலைக்கழக கற்கையில் மற்றுமொரு பரிமாணத்தை வழங்கும் வகையில் இந்த ரக்பி செவன்ஸ் போட்டிகள் அமைந்துள்ளன. பாரம்பரிய கல்விச் செயற்பாடுகளுடன், திறன்கள், பெறுமதிகள் மற்றும் ஒழுக்கம் போன்றவற்றை வழங்கி, சிறந்த தனிநபராக கட்டியெழுப்புவது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு, ICBT பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ரக்பிசெவன்ஸ் போட்டிகள் வருடாந்தம் முன்னெடுக்கப்படுகின்றன. இப்போட்டிகளுக்கு அதிகளவு வரவேற்பு காணப்படுவதுடன், இலங்கையின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ரக்பி போட்டித் தொடராகவும் திகழ்வதாக ICBTயின் தலைவர் டொக்டர் ஜகத் அல்வித் தெரிவித்தார்.

இந்த ஆண்டு போட்டிகளில் ஆயிரக்கணக்கான இளம் பார்வையாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், இதில் தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் அடங்கியிருப்பர். உள்நாட்டு பாடசாலைகள் மட்டத்தில் பெருமளவு கவனத்தை இந்த போட்டித்தொடர் ஈர்த்துள்ளதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த பெருமளவு ரக்பி ஆர்வலர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். பிரதான நிகழ்வுக்கு மேலாக, ஏனைய செயற்பாடுகள் பலதும் அடங்கியிருக்கும். களிப்பூட்டும் விளையாட்டுக்கள் மற்றும் மகிழ்ச்சியூட்டும் அம்சங்கள் எனபலதும் போட்டித்தொடர் முழுவதிலும் அடங்கியிருக்கும். போட்டிகளை பார்வையிட வருகைதந்த அனைவருக்கும் விறுவிறுப்பான விடயங்கள் அடங்கியிருப்பதை இது உறுதிசெய்யும்.

இந்த போட்டித்தொடரின் 12 அணிகள், Cup, Plate மற்றும் Bowl ஆகிய 3 சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன. 12 அணிகளும் முதலில் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குழு மட்டத்தில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் Cup காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும். இறுதி இரு நிலைகளைப் பெறும் அணிகள் Bowl அரையிறுதிப்போட்டிகளுக்கு முன்னேறும். Cup காலிறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவும் அணிகள், Plate அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறும் என்பதுடன், Cup காலிறுதிப் போட்டிகளின் வெற்றியாளர்கள் Cup அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறுவதுடன், Cup இறுதிப் போட்டிக்கும் முன்னேறுவார்கள். IRB ஒழுங்கு விதிமுறைகளின் பிரகாரம் போட்டிகள் இடம்பெறுகின்றன. SLRFU இன் மத்தியஸ்தர்கள் போட்டிகளில் அங்கம் பெறுவதுடன், வெற்றியீட்டும் அணிகளுக்கு பணப்பரிசுகள் மற்றும் வெற்றிக் கிண்ணம் பரிசளிக்கப்படும்.

போட்டித் தொடரின் பணிப்பாளராக இலங்கை ரக்பியின் புகழ்பெற்ற அங்கத்தவரும், முன்னாள் நடுவருமான தில்ரோய் பெர்னான்டோவை ICBT அதிகாரிகள் நியமித்துள்ளனர். இந்த முயற்சியை மேற்கொள்கின்றமையை பெர்னான்டோ வரவேற்றிருந்ததுடன், இது போன்ற போட்டித்தொடர் ஒன்று காணப்படாமையை இலங்கை உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். உள்நாட்டு ரக்பி விளையாட்டை சர்வதேச மட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு இது போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவது அத்தியாவசியமானது என மேலும் குறிப்பிட்டார்.

1999 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ICBT கம்பஸ் இலங்கையில் முன்னணி தனியார் உயர் கல்விசேவை வழங்குநராகத் திகழ்கின்றது. ICBT இனால் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கைகள் ஐக்கிய இராச்சியத்தின், Cardiff Metropolitan பல்கலைக்கழகம், University of Sunderland, Birmingham City University, மற்றும் Liverpool John Moores University ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படுகின்றன.

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை