சிம்பாப்வேயுக்கு பதில் கென்யாவை களமிறக்குவதற்கு ஐ.சி.சி திட்டம்

உலகக் கிண்ண டி20 தகுதிச்சுற்று:

சிம்பாப்வே அணிக்கு பதிலாக, உலகக் கிண்ண டி20 தகுதிச்சுற்று போட்டிகளில் நைஜீரியா அணியை களமிறக்க ஐ.சி.சி முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நிர்வாக சீர்கேடு பிரச்சினைகள் காரணமாக ஐ.சி.சி கிரிக்கெட்டில் இருந்து சிம்பாப்வே அணி தடை செய்யப்பட்டது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண டி20 தொடருக்கான தகுதிச் சுற்றுகளில், சிம்பாப்வே அணியால் விளையாட முடியாமல் போனது.

எனவே சிம்பாப்வே அணிக்கு பதிலாக நைஜீரிய அணியை தகுதிச்சுற்று போட்டிகளில் களமிறக்க ஐ.சி.சி முடிவெடுத்துள்ளது. அதேபோன்் சிம்பாப்வேக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், மகளிர் உலகக் கிண்ண டி20 தகுதிச்சுற்றுகளில் நமீபியா மகளிர் அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

வரும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகும் இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் நைஜீரியா, ஐக்கிய அரபு இராச்சியம், ஹொங்கொங், அயர்லாந்து, கென்யா, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், பபுவா நியூகினியா, ஸ்கொட்லாந்து, சிங்கப்பூர் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் ஆறு இடங்களைப் பிடிக்கும் அணிகள், 2020ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத்தில் விளையாடும்.

மேலும், உலகக் கிண்ண தொடரில் தகுதி பெறும் 6 அணிகள் இலங்கை, பங்களாதேஷ் ஆகியவற்றுடன் முதல் சுற்றில் இணையும். அவுஸ்திரேலியாவில் இந்த டி20 உலகக் கிண்ணம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை