வயிற்றில் பிளாஸ்டிக்: டூகோங் குட்டி மரணம்

தாய்லந்தின் தென்மேற்குக் கரையில் ஒதுங்கிய நோய்வாய்ப்பட்ட டூகோங் குட்டி மாண்டது.

வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் துகள்களால் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக டூகோங் கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் கரையொதுங்கிய அந்த டூகோங் மீட்புப் பணியாளர்களுடன் விளையாடும் படங்கள் இணையத்தில் வெகுவாகப் பரவின. அதற்கு ‘மரியாம்’ என்ற செல்லப் பெயர் சூட்டப்பட்டது. மரியாம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து கடல் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு தாய்லந்தில் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நிரம்பியுள்ள தாய்லந்தின் நீர்நிலைகளில் மரியாமைத் தவிர்த்து மற்ற பல கடல் உயிரினங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. மரியாமின் மரணம் குறித்துத் தாய்லாந்தின் கடல்துறை, கரையோர வளப் பிரிவு செய்த பேஸ்புக் பதிவேற்றம் 11,000க்கும் மேலான முறை பகிரப்பட்டுள்ளது.

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை