வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது நேகம விளையாட்டு கழகம்

நேகம நிவ் ஸ்டார் விளையாட்டுக் கழகம் இரண்டாவது வருடமாக நடத்திய நேகம நிவ் ஸ்டார் சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை இவ் வருடம் நேகம நிவ் ஸ்டார் விளையாட்டுக்கழகமே சுவீகரித்துக் கொண்டது.

வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பிரபல 32 கிரிக்கெட் அணிகளை இணைத்து நடத்திய லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இம் மாதம் 04 ஆம் திகதி நேகம முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு நேகம நிவ் ஸ்டார் அணியும், கலேவெல என்.வை.எஸ்.சீ.அணியும் தகுதி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கலேவெல என்.வை.எஸ்.சீ.அணி 08 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேகம நிவ் ஸ்டார் அணி 6 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை பெற்று 07 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று நேகம நிவ் ஸ்டார் சம்பியன் லீக் வெற்றிக் கிண்ணத்தையும் ரூபா 35,000 பணப் பரிசினையும் சுவீகரித்துக் கொண்டது.

இரண்டாவது இடத்தை கலேவெல என்.வை.எஸ்.சீ. அணி பெற்றதுடன் ரூபா 20,000 பணப்பரிசினையும், கிண்ணத்தையும், மூன்றாம் இடத்தை நெல்லியகம யூத் கிரிக்கெட் அணி பெற்றதுடன் ரூபா 10,000 பணப்பரிசினையும் கிண்ணத்தையும் பெற்றுக் கொண்டனர்.

தொடரின் சிறப்பாட்ட வீரர், இறுதிப் போட்டியின் சிறப்பாட்ட வீரர், சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் தொடரில் அதி கூடுதலான ஆறு ஓட்டங்கள் பெற்றவர் ஆகிய விருதுகளையும் பணப்பரிசுகளையும் நேகம நிவ் ஸ்டார் விளையாட்டுக்கழக அமீன் பெற்றுக் கொண்டார்.

அதி கூடுதலான விக்கெட்டுக்களை நேகம நிவ் ஸ்டார் அணி சல்மானும், அதி கூடுதலான நான்கு ஓட்டங்களை மரதன்கடவல அல் அமீன் விளையாட்டுக்கழக அஸாம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கல்நேவ தினகரன் விசேட நிருபர்

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை