சுமந்திரனின் தனிநபர் பிரேரணை உள்நோக்கம் கொண்டது

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை

மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற வாய்ப்புக்கள் இல்லை. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் பாராளுமனறத்தில் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேரணை உள்நோக்கம் கொண்டே கொண்டு வரப்பட்டுள்ளது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தலைகளை நடத்துவதில் தற்போதய அரசில் பிரச்சினை  நிலவுகின்றது. ஆனால் அதனை நடாத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருகின்றார். ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் போட்டித்தன்மை நிகழ்கின்றது. இந்நிலையில் ஓர் பக்கம் சார்ந்து கூட்ட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமனறத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பாக தனி நபர் பிரேரணையை சமர்ப்பித்திருக்க முடியும் ஆனால் அது முக்கியமல்ல.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையில் இருக்கின்றோமா? என ஜானாதிபது உச்ச நீதிமன்றத்தில் வியாக்கியானம் கோரியுளளார். எனினும் நீதிமனறத்தினால் அரசுக்கு அறிவுரை மட்டுமே கூற முடியும். இதனை செய் அதனை செய் என கூற இயலாது. எனவே ஜனாதிபதி இவ்வாறான நிலையிலும் நீதிமன்றில் ஏன் வியாக்கியானத்தை கோரினார் என்று எனக்கு தெரியவில்லை. ஓர் சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் மாகாண சபை தேர்தலை இப்போது நடாத்த முடியும் என கூறினால் கூட அதனை அரசாங்கத்தினால் நிராகரிக்க முடியும். இதனால் மாகாண சபை தேர்தல் நடைபெற வாய்ப்புக்கள் மிக குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் கூட்ட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டு வருகின்றார் எனில் தனிப்பட்ட உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும். இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது இந்த வருடத்திலோ நடைபெற வாய்ப்புக்கள் இல்லை என்பதே எனது கருத்து என்றார்.

(பருத்தித்துறை விசேட நிரூபர் - நிதர்ஷன் வினோத்)

Sun, 08/25/2019 - 21:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை