நாட்டின் அடுத்த தலைவர் மக்களின் துன்பங்களில் பங்கேற்பவராக இருக்க வேண்டும்

ஊடகவியலாளர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கும் சிறந்த தலைமைத்துவம் ஒன்று நாட்டில் உருவாக வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்தார்

நாட்டின் அடுத்த தலைவர் சிறந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்டவராகவும் மக்களின் துன்பங்களில் முழுமையாகப் பங்கு கொள்பவராகவும் இருத்தல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்..

அத்துடன், இந்த நாடு சிறந்த நற்பிரஜையுள்ள நாடாக உருவாக வேண்டுமென்றால் ஐம்பது வீதமான உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்தால் போதும். 225 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வியாங்கொடை - சான்ஸ் பெலஸ் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"சிறந்த ஊடகவியலாளர் சிறந்த பிரஜை" எனும் தலைப்பில் அமைச்சர் இங்கு உரை நிகழ்த்தினார். பிரபல அரச ஊடகங்கள் பலவற்றிலிருந்தும் கலந்துகொண்ட அதிகாரிகள் பலரும் இங்கு கருத்துரைகளை வழங்கினர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

நாம் எப்பொழுதும் சிறந்த ஊடகவியலாளர்களாக இருப்போமென்றால் எமக்கு இந்த நாட்டின் மிகச் சிறந்த பிரஜைகளாக உருவாக முடியும்.

அத்துடன், இந்த நாடு சிறந்த நற்பிரஜைகளுள்ள நாடாக உருவாக வேண்டுமென்றால்

ஐம்பது வீதமான உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்தால் போதும்.

நாம் சிறந்த ஊடகவியலாளர்களாக எப்பொழுதும் இருப்போமேயானால், நாட்டின் சிறந்த பிரஜைகளாகத் திகழ்வோம். அத்துடன், ஊடகவியலாளர்கள் எப்பொழுதும் பொறுப்புடனும் செயற்திறனுடனும் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் அவர்களுக்குள்ள மிகப்பெரும் தேவையும் கடப்பாடுமாகும். ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பூரண சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும் என்றார்.

 

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை