ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; பிரதமரால் விரைவில் அறிவிக்கப்படுவார்

இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அறிவிப்பார் என சுற்றுலாத் துறை . கிறிஸ்தவ விவகார இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் அலுவிஹார தெரிவித்தார்.

தம்புள்ள பிரதேசத்தில் எம்புல் அம்பே பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட ரன்ததகம மாதிரிக் கிராமத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சஜித் பிரேததாச அவர்களுடைய கல்வி நிலை தொடர்பாக எல்லோருக்கும் நன்கு தெரியும். அவர் மத்திய வங்கி கொள்ளை என எதிலும் முறைப்பாடுகள் இல்லாதவர். அவருடைய செயற்பாடுகள் எல்லாவற்றையும் மக்கள் முழுமையாக நன்கு அறிவார்கள்.

சஜித் பிரேமதாச கட்சியின் பிரதித் தலைவராக நியமிப்பதற்கு என்னுடைய தந்தை அலிக் அலுவிஹார முன்மொழிந்ததாகவும், அவருக்குப் பின்னால் இருக்குமாறு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த காலத்தில் பொது அபேட்சகராக சரத் பொன்சேகாவை நிறுத்தி தோல்வியைத் தழுவியதன் பிற்பாடு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக்கும் நிலையிலும் கட்சியினுள் குழப்ப நிலை காணப்படுவதாக வெளிக்காட்டினர். அந்தவகையில் பாராளுமன்றக் குழுவினர்கள் ஜனாதிபதி அபேட்சகர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து தெரிவாக வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(மாவத்தகம நிருபர்)

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை