குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றும் ராஜபக்‌ஷக்களின் கனவுகள் பலிக்காது

மக்களால் நிராகரிக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வருவதற்கு மக்கள் இடமளிக்கப் போவதில்லையென பேருவளை ஐக்கிய தேசிய கட்சி பிரதம அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான இப்திகார் ஜமீல் தெரிவித்தார். கம்பெரலிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தை பேருவளை பயாகலையில் தொடங்கிவைத்துப் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு பேசிய அவர் கூறியதாவது :

தோல்வியடைந்து வங்குரோத்து நிலையிலுள்ள அரசியல்வாதிகள் மீண்டும் நாட்டுமக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கின்றனர். இதற்காகவே அவர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி வருகின்றனர். ஜனநாயகம், ஊடகசுதந்திரம்,நல்லிணக்கம் என்பவற்றின் மூலம் அரசாங்கம் நாடுபூராகவும் மேற்கொண்டு வரும் பாரிய அளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகளால் பொறாமை கொண்ட எதிரணியினர் ஜனநாயகம் நல்லிணக்கத்தை சீர்குலைத்து மீண்டும் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இவர்களின் இக்கபட முயற்சி ஒருபோதும் கைகூடாது.

எதிரணியினரின் ஒரே நோக்கம் மக்களை ஏமாற்றி ஜனாதிபதிப் பதவியை கைப்பற்றுவதேயாகும். குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கும் இவர்களின் கனவு ஒருபோதும் நனவாகாது.

கம்பெரலிய திட்டம் கிராமங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சிறந்த திட்டமாகும்.இதனூடாக வீடுகள், வீதிகள்,பாதைகள் விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பேருவளைவிஷேட நிருபர்

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை