மலையக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் பாரபட்சம்

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு; ஏனைய பிரதேசங்களுக்கு வழங்கப்படுவது போல் அரசாங்கத்தால் நிவாரணங்கள் வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் பி. சக்திவேல் நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பீ.ஆர். புஸ்பகுமாரவிடம் முறையிட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், மஸ்கெலியா பிரதேச சபை தலைவி செம்பகவள்ளி, கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் சுப்பிரமணியம் கதிர் செல்வம், இ.தொ.கா தேசிய அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி. இராஜதுரை மற்றும் நுவரெலியா இடர் முகாமைதுவ அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

அங்கு அவர் மேலும் கூறுகையில் இந்த நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பொழுது இடர் முகாமைத்துவ அமைச்சின் மூலம் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் பெருந்தோட்டப் பகுதியில் அனார்த்தங்கள் நிகழும் பொழுது இந்த இடர் முகாமைத்துவ அமைச்சியின் மூலம் நிவாரணங்கள் கிடைப்பதில்லை. பெருந்தோட்ட பகுதியில் அனர்த்தங்கள் ஏற்படும் பொழுது பிரதேச செயலகங்கள் மூலம் 7 நாட்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் பெட்சீட், பாய் மாத்திரம் வழங்கப்படுகிறது. வேறு உதவிகள் கிடைப்பதில்லை. கடந்த சில தினங்களாக பெய்த கடும் காற்றினாலும் மழையினாலும் பெருந்தோட்ட மக்கள் பலர் வீடுகள் இழந்து நிர்கதியாகியுள்ளார்கள். பெண்கள், பிள்ளைகள், பாடசாலை மாணவர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் பாதிப்பு ஏற்படுகின்ற பொழுது வெளிநாடுகளிலிருந்தும் செல்வந்தர்களிடமிருந்தும் அரசாங்கத்தாலும் உதவிகள் இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நிதிகள் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் கிடைப்பதில்லை. எனவே பெருந்தோட்ட மக்களும் இந்நாட்டு பிரஜைகளாக மதித்து இயற்கை அனார்த்தங்களால் பாதிப்படையும் பொழுது நிவாரணங்கள் சலுகைகள் உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறினார்.

இதன்போது நுவரெலியா மாவட்ட செயலாளர் புஸ்பகுமார கூறுகையில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களுக்கு ஒரு சிறிய தொகை நிதியே எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களினதும் அதிகாரிகளினதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டு சென்று மிகவிரைவில் உரிய தீர்வு பெற்று தருவதாக உறுதியளித்தார். இக் கலந்துரையாடலின் போது நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனார்த்தங்களின் விபரங்கள் பிரதேச சபை தலைவர்கள் மூலம் மாவட்ட செயலாளருக்கு கையளிக்கப்பட்டது.

தலவாக்கலை குறூப் நிருபர்

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை