சீருடையை பெற உடலை தோண்டி எடுத்த அதிகாரிகள்

மேற்கு கென்யாவில் சீருடையுடன் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் உடலை அதிகாரிகள் தோண்டி எடுத்து அந்த சிருடையை அகற்றியுள்ளனர்.

மார்டின் ஷிகுகு அலுகோயே என்ற அந்த ஆடவர் இம்மாதம் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரது உடல் இளைஞர் சேவை சீருடை ஒன்றுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில் உள்ளுர் அதிகாரிகள் அந்த ஆடவரின் உடலை தோண்டி எடுத்து சீருடையை அகற்றியுள்ளனர்.

எமது நிலத்தினதும் எமது முன்னோர்களினது சட்டத்தை அவர்கள் மீறிவிட்டார்கள் என்று அலுகோயேவின் உறவினர் ஒருவர் கோபத்தை வெளிட்டுள்ளார்.

சீருடையை திரும்பத் தரும்படி அதிகாரிகள் கேட்டதற்கு தாம் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தமக்கு தெரியாமல் அடக்கஸ்தலம் தோண்டப்பட்டு சீருடை திரும்பப் பெறப்பட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இறந்த உடலுக்கு புது ஆடை அணிவிக்கப்பட்டு குடும்பத்தினரால் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை