கட்டாய திருமணத்திற்கு எதிராக துபாய் இளவரசி ஹயா வழக்கு

துபாய் மன்னரிடம் இருந்து பிரிந்து சென்ற அவரது மனைவி கட்டாய திருமணத்திற்கு திராக பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

மன்னர் ஷெய்க் முஹமது அல் மக்தூமின் மனைவி இளவரசி ஹயா அல் ஹுஸைன் அவரிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கும் மூன்றாவது பெண்ணாக உள்ளார். ஹயா கடந்த மாதம் லண்டனில் தலைமறைவானதாக செய்திகள் வெளியாகின. உயிராபத்தில் இருப்பதாக அவர் பின்னர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான வழக்கு லண்டனில் செவ்வாய்கிழமை ஆரம்பமானது. தனக்கு கட்டாயத் திருமணம் நடத்தப்பட்டதாகக் கூறியும், பாதுகாப்புக் கேட்டும் லண்டன் நீதிமன்றத்தில் ஹயா தொடர்ந்த வழக்கின் விசாரணையே இடம்பெற்றது. இந்த வழக்கு தொடர்பான பகுதியளவு செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு நீதிபதி அனுமதியளித்தார்.

அப்போது தனது குழந்தைகளை துபாய்க்கே திருப்பி அனுப்புமாறு ஷேக் முகமது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை மறுதிகதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

ஜோர்தானில் பிறந்த 45 வயது ஹயா 70 வயது மன்னரின் ஆறாவது மனைவியாவார். முன்னதாக மன்னரின் இரு மகள்களும் குடும்பத்தை விட்டு தப்பி ஓடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 08/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை