‘டைட்டானிக்’ கப்பலை கட்டிய நிறுவனம் திவால்

டைட்டானிக்கு கப்பலைக் கட்டிய வடக்கு அயர்லாந்தின் பிரபல கப்பல் கட்டுமான நிறுவனம் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பெல்பாஸ்டில் அமைந்திருக்கும் 158 ஆண்டுகள் பழமையான ஹரல்ட் அன்ட் வோல்ப் என்ற அந்த நிறுவனத்தின் மறுசீரமைப்பை மேற்பார்வை இடுவதற்கு பிரிட்டிஷ் நிர்வாகம் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் செல்வாக்கு மிக்க நிறுவனமாக இருந்த இந்த கப்பல் கட்டுமானத் துறையில் 35,000க்கும் அதிகமானோர் பணியாற்றியபோதும் தற்போது இந்தத் தளத்தில் 130 ஊழியர்களே உள்ளனர். இதில் அரசு தலையிட வேண்டும் என்று இந்த ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஹரல்ட் அன்ட் வோல்ப் நிறுவனம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் திவாலானதாக தம்மை பதிவு செய்து விற்பனைக்கு விட்டுள்ளது. எனினும் கொள்வனவாளர் ஒருவரை தேடுவதற்கான காலம் கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த கப்பல்துறை 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பலை கட்டி முடித்தமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தக் கப்பல் பனிப்பாறையில் மோதி மூழ்கியதில் 1,517 பேர் உயிரிழந்தனர்.

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை