இறுதி சுற்றில் செரீனா-ஆன்ட்ரிஸ்கு

ரோஜர்ஸ் கோப்பை:

டி.பிள்.யு.டி.ஏ டென்னிஸ் போட்டி மகளிர் இறுதிச் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ்- பியான்கா ஆன்ட்ரிஸ்கு ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் செரீனா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செக். குடியரசின் மேரி பெளஸ்கோவாவை வீழ்த்தினார். இதில் அவர் பட்டம் வென்றால் கடந்த 2017-ஆஸி. ஓபன் வெற்றிக்கு பின்னர் பெறும் பட்டமாகும்.

மற்றொரு அரையிறுதியில் வென்று கனடாவின் 19 வயது வீராங்கனை ஆன்ட்ரிஸ்கு வென்றார். 50 ஆண்டுகளில் முதல் பட்டத்தை வெல்லும் கனடா வீராங்கனை என்ற சிறப்பை பெறும் தீவிரத்தில் உள்ளார் அவர். மாண்ட்ரியல் மாஸ்டர்ஸ் ஏடிபி அரையிறுதியில் கேல் மோன்பில்ஸ் ஆட்டத்தில் இருந்து விலகியதால், நேரடியாக இறுதிக்கு தகுதி பெற்றார் ரபேல் நடால். மற்றொரு அரையிறுதியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் 6-1, 7-6 என நேர் செட்களில் சக வீரர் காரன் கச்சனோவை வென்றார்.

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை