புதிய வீடமைப்பு திட்டங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் பயனாளிகளிடம் கையளிப்பு

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து முன்னெடுக்கும் கிராம எழுச்சி கம்முதாவ மூலம் சகலருக்கும் நிழல் திட்டத்தின் கீழ் தம்புள்ள, மாத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 58 வீடுகள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

மாத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் ஈரியகொள்ள பகுதியில் ஸ்ரீமத் அலிக் அலுவிஹார கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 23 வீடுகளும் தம்புள்ள பிரதேச செயலாளர் பிரிவில் எம்புல் அம்பே பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 35 வீடுகளுமே இவ்வாறு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மக்களுக்கான காணி உறுதிகளும் அமைச்சரினால் வழங்கப்பட்டதுடன், சொதுறுபியச வீடமைப்புக் கடன்கள், சுய தொழில் உபகரணப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இத்திட்டத்தின் கீழ் கிராமத்திற்கு தேவையான நீர், மின்சாரம், மற்றும் அடிப்படை வசதிகள் என்பனவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார, சுற்றுலாத்துறை கிறிஸ்தவ மத விவகார மற்றும் வனஜீவ இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹார, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்ன, தம்புள்ள தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் பியன் விஜயரத்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாத்தளை சுழற்சி நிருபர்

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை