விண்வெளியில் இடம்பெற்ற முதல் குற்றம் குறித்து நாசா விசாரணை

தனது பிரிந்த ஓரின துணைவியரின் வங்கிக் கணக்கை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இயக்கியது தொடர்பில் விண்வெளி வீராங்கனை ஒருவர் மீது நாசா விசாரணை நடத்தி வருகிறது. விண்வெளியில் இடம்பெற்ற முதல் குற்றச் செயலாக இது பதிவாகியுள்ளது.

அன்னே மக்லைன் என்ற அந்த விண்வெளி வீராங்கனை அந்த வங்கிக் கணக்கை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இயக்கியதை ஒப்புக்கொண்டபோதும் தான் தப்புச் செய்யவில்லை என்று மறுத்திருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் பிரிந்து சென்ற அவரது ஒருபாலுறவு துணைவி சம்மர் வோர்டன் மத்திய வர்த்தக ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனிடையே மக்லைன் பூமிக்கு திரும்பியுள்ளார். தனது முன்னாள் துணைவி மற்றும் அவரது மகனின் நிதி நிலைமை நன்றாக உள்ளதா என்று தான் பரிசோதனை மட்டுமே செய்ததாக அவர் கூறியுள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. விண்வெளி வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ அந்த நாடுகளின் சட்டம் அவர்களுக்கு பொருந்தும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை