ஜனாதிபதியின் மனு தொடர்பில் கருத்து தெரிவிக்க அனுமதி கோரி மனுத் தாக்கல்

பழைய முறையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்துவதற்குரிய சாத்தியம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருட்கோடல் விடயங்களில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உச்ச நீதிமன்றத்தில் இடைத்தரப்பு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தவிர்ந்த மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்கு சந்தர்ப்பம் கிடையாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் சட்டத்திற்கிணங்க மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு எல்லை நிர்ணய முறை அவசியமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஏதாவது ஒரு முறையின் கீழ் குறிப்பிட்ட காலத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவது அத்தியாவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விடயங்களை கோரியுள்ளதன் மூலம் மூன்று பிரச்சினைகள் தொடர்பில் கோரியுள்ளார். அந்த மூன்று கேள்விகளுக்கும் “இல்லை என்ற” பதிலை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். (ஸ)

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை