வெனிசுவேலாவுக்கு எதிராக அமெ. பொருளாதார தடை

வெனிசுவேல ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ மற்றும் அவரது அரசுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கையெழுத்திட்ட இந்த உத்திரவின்படி அமெரிக்காவில் உள்ள வெனிசுவேல அரசாங்கத்தின் அனைத்து சொத்துகளும் முடக்கப்படுவதோடு அந்த அரசுடனான பரிவர்த்தனைகளும் தடுக்கப்படுகின்றன.

நிகோலஸ் மடுரோ மற்றும் அவரத சகாக்கள் தொடர்ந்து அதிகாரத்தை அபகரித்திருப்பது மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நிலையிலேயே டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெனிசுவேலாவின் முக்கிய ஏற்றுமதி வருவாயான எண்ணெயை இலக்கு வைத்தே அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்த தடைகள் மூலம் அமெரிக்காவில் இருக்கும் வெனிசுவேலாவின் அனைத்து சொத்துகள் மற்றும் நலன்களும் பாதிக்கப்படுகிறது.

எண்ணெய் வளம் கொண்ட வெனிசுவேலா கடந்த ஐந்து ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதோடு அங்கு உணவு மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை