பயன்தரு மரங்களை அழித்த காட்டு யானைகள்

பாதுகாப்பு வேலி அமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பெருமளவான பயன்தரு மரங்கள் அழிவடைந்துள்ளன.

உடையார்கட்டு, தேராவில் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானைகள் பெருமளவான தென்னை மரங்களை அழித்துள்ளதுடன் பொது மக்களையும் விரட்டியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

குடியிருப்புக்களுக்குள் புகுந்த யானைகள் தென்னை மரங்களை அழித்துள்ளன. இதன்போது யானைகளை மக்கள் விரட்டிய போதும் பதிலுக்கு மக்களை யானை விரட்டியதாகவும் இதனால் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் ஆபாய நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை இப் பிரதேசத்தில் யானை வேலிகளை அமைத்துத்தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்படுகின்றபோதும் இது வரை எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பரந்தன் குறூப் நிருபர்

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை