பென்சில்வேனியாவில் தீவிபத்து ஐந்து சிறுவர்கள் உயிரிழப்பு

பென்சில்வேனியா சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எட்டு மாதம் முதல் ஏழு வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பணியாற்றும் பெற்றோர்களின் பிள்ளைகளை இரவு நேரங்களில் பரமாரிக்கும் நிலையமொன்றிலேயே திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஐந்து சிறுவர்கள் உயிரிழந்திருப்பதுடன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சிறுவர்களில் ஒருவர் உரிமையாளருடைய பிள்ளையென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு தங்கியிருந்த 12 வயது மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவர் பராமரிப்பு நிலையம் தீப்பற்றத் தொடங்கியதும் ஜன்னல் ஊடாக பாய்ந்து தப்பியுள்ளனர். இவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதும் அதன் உரிமையாளர் அங்கிருந்து தப்பி தனது வாகனத்தை செலுத்திக் கொண்டு வைத்தியசாலைக்குச் செல்ல முற்பட்டுள்ளார். செல்லும் வழியில் வாகன விபத்தில் சிக்கி அங்கிருந்து விமானம் மூலம் அருகிலிருந்த வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை