ஊ.சே.நி, ஊ.ந.நி, தோட்.தொழிலாளருக்கு

விரைவில் வழங்க  நடவடிக்ைக

இதுவரை ஊழியர் சேமலாப நிதி,நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடை வழங்கப்படாத தோட்டத் தொழிலாளர்களுக்கு அவற்றை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்கு நிதி அமைச்சில் நிதி கோரியுள்ளதாகவும் சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி,

மலைநாட்டு மரபுரிமை அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் காணி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக கூறிய அவர், எஞ்சியவர்களுக்கும் பணிகொடையை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். வாய்மூல விடைக்காக வேலுகுமார் எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான ஹந்தானை தோட்டத்தில் பணி புரிந்த ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி,நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடை வழங்கப்படாதது குறித்து வேலு குமார் எம்பி ,கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,கடந்த சந்திரிகா மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிகளில் இவை வழங்கப்படவில்லை.20 வருடங்களின் பின்னர் 100 நாள் அரசில் அவற்றை நான் வழங்கினேன்.இந்த ​தோட்டங்களை தனியார் துறைக்கு வழங்கிய வேளை, குத்தகை பணத்தை திறைசேரிக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் இந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இது தொடர்பில் நிதி அமைச்சருக்கு தெளிவுபடுத்தி உள்ளேன். எஞ்சிய தொகையை வழங்க அவர் உடன்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணி வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்தாலும் பல தோட்டங்களில் இன்னும் காணி வழங்கப் படவில்லை அவற்றையும் வழங்குமாறு வேலு குமார் எம்.பி கோரினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை