ஹுவாவி மீதான அமெரிக்க வர்த்தகத் தடையில் தாமதம்

சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவி மீதான தடையை அமுல்படுத்துவதற்கான காலத்தை மேலும் 90 நாட்களுக்கு அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது.

தேசிய பாதுகாப்பு கவலை காரணமாக இந்த நிறுவனத்தை கடந்த மே மாதம் அமெரிக்கா தனது தடைப்பட்டியலில் சேர்த்தது. எனினும் இந்த தடை மீது அமெரிக்கா தற்காலி தளர்வை ஏற்படுத்தியதோடு அந்தக் காலம் கடந்த திங்கட்கிழமையுடன் முடிவுற்றது. எனினும் அமெரிக்கா வர்த்தகம் செய்யாத பட்டியலில் மேலும் ஹுவாவியின் 46 துணை நிறுவனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வர்த்தகச் செயலாளர் வில்புர் ரொஸ் குறிப்பிட்டார்.

இந்த தற்காலி தடை நிறுத்தம் மூலம் கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு ஹுவாவியுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட முடியுமாக உள்ளது. அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு இந்த தளர்வு உதவும் என்று ரொஸ் குறிப்பிட்டார்.

இந்த தடைப்பட்டியலில் தனது துணை நிறுவனங்கள் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்ப்பை வெளியிட்டிருக்கு ஹுவாவி, இது அரசியல் நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளது.

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை