கறுப்பினத்தவரை குதிரையில் இழுத்துச் சென்ற பொலிஸார்

இரு வெள்ளையின பொலிஸார் குதிரை மேல் இருந்து கொண்டு ஒரு கறுப்பினத்தவரை விலங்கிட்டு கயிற்றால் இழுத்துச் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று அமெரிக்காவெங்கும் ஆத்திரத்தை தூண்டியுள்ளது.

கறுப்பினத்திவருக்கு எதிரான கடந்த கால அடிமை யுகம் மற்றும் இனப் பிரிவினை காலத்தை நினைவூட்டுது போன்று அந்தப் புகைப்படம் இருப்பதாக பலரும் சாடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து டெக்சாஸ் மாநிலத்தின் கேல்வஸ்டன் நகர பொலிஸ் தலைவர் வர்னொன் ஹேல் மன்னிப்புக் கேட்டுள்ளார். எனினும் அவரது அறிக்கை பலவீனமானது எனக் கூறி மேலும் விமர்சனங்கள் வலுத்துள்ளன.

புகைப்படத்தில் இருக்கும் கறுப்பினத்தவர் டொனால்ட் நீலி என்றும் அவர் அத்துமீறி நுழைந்தது தொடர்பில் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கும் ஹேல், அவரை குதிரையில் அன்றி காரி அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நீலி நீண்ட கயிறு ஒன்றில் பிணைக்கப்பட்டு வீதி நெடுகிலும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை