இரண்டாவது இன்னிங்ஸிலும் ஸ்டீவ் ஸ்மித் அபார சதம் பெற அவுஸ்திரேலியா முதலாவது ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு 398 ஓட்ட வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
எஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்காவது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸுக்கு 487 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
கடந்த ஆண்டு பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்து 12 மாதப் போட்டித் தடைக்குப் பின்னர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய ஸ்மித் இரண்டாவது இன்னிங்ஸிலும் 142 ஓட்டங்களை பெற்றார்.
மத்தியு வாடேவும் 110 ஓட்டங்களை பெற இங்கிலாந்து அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்க அவுஸ்திரேலிய அணியால் முடிந்தது. போட்டியில் உபாதைக்கு உள்ளான ஜேம்ஸ் அண்டர்ஸ் இன்றி இங்கிலாந்து பந்துவீச்சு முகாம் ஆஸி. துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க தவறியது.
இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 284 ஓட்டங்களை பெற்றதோடு இங்கிலாந்து முதல் இன்னிங்ஸுக்காக 374 ஓட்டங்களை பெற்றது.
from tkn