ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி மாநாட்டில் தீர்மானம்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP) கட்சியின் தலைமைத்துவம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவரான ஜி.எல். பிரிஸினால் கட்சியின் தலைமத்துவ பதவி அவரிடம் கையளிக்கப்பட்டது.
பொதுஜன பெரமுண கட்சியின் முதலாவது தேசிய மாநாடு, கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் இன்று (11) பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமானது. தற்போது இடம்பெற்று வரும் கட்சியின் மாநாட்டிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக தெரிவான கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, குறித்த அறிவிப்பை மேற்கொண்டார்.
இம்மாநாட்டில், பொதுஜன பெரமுணவுடன் தொடர்புபட்ட அனைத்து அரசியல் கட்சிகள் அரசியற் கட்சி பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
from tkn
0 comments:
கருத்துரையிடுக