வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு; வடக்கிலும் நோயாளர்கள் பாதிப்பு

நாடாளவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் வேலை நிறுத்தப் போராட்டமானது நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

காலை 8 மணிக்கு ஆரம்பமான பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று காலை 8 மணி வரை தொடரவுள்ளது. இந் நிலையில் வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் வைத்தியசாலையின் வெளி நோயளர் பிரிவுகளில் எவ்வித பணிகளும் இடம் பெறவில்லை. தூர இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.

எனினும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் வழமை போல் இடம்பெற்றது. அரச வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்து தட்டுப்பாடு மற்றும் தரம் குறைந்த மருந்துகள் வழங்கப்படுகின்றமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும், கல்வி பொது உயர் தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்தி பெறாத சிலரை வைத்தியர்களாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் சில காரணங்களை முன்நிறுத்தியுமே நாடளாவிய இப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மன்னார் குறூப் நிருபர்

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை