முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் உலரவிடும் தளங்கள் குறைவால் விவசாயிகள் பெரும் அவதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் உலரவிடும் தளங்கள் போதியளவில் இல்லாததன் காரணமாக விவசாயிகள் நெல்லினை வீதியில் காயவிடும் நிலைமை தொடர்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம், முத்தையன்கட்டுக்குளம், உடையார்கட்டுக்குளம் உட்பட சிறுபோக நெற்செய்கை இடம் பெற்ற அனைத்துக் குளங்களின் கீழும் அறுவடைகள் தற்போது நடைபெறுகின்றன. நெல்லினைக் காயவிடுவதற்கு வீதியினை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். குளங்களின் கீழ் அதிகளவிலான நெல் உலரவிடும் தளங்களை அமைப்பதன் மூலம் வீதிக்கு நெல்லினைக் கொண்டு வருகின்ற நிலைமை மாறுபடும். இதேவேளை வவுனிக்குளம், முத்தையன்கட்டுக்குளம், உடையார்கட்டுக்குளம் உட்பட மாவட்டத்தின் அனைத்து நீர்ப்பாசனக் குளத்தின் கீழும் நெற் களஞ்சியங்கள் அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களஞ்சியங்கள் இல்லாததன் காரணமாகவே விவசாயிகள் நெல்லினை உலரவிடாமல் உடனடியாக குறைந்த விலையில் விற்பனை செய்கின்ற நிலைமை உள்ளதாகவும் தெரிவிப்பதுடன் மாவட்டத்தில் நெற் களஞ்சியங்களை கூடுதலாக அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

முல்லைத்தீவு குறூப் நிருபர்

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை