கொழும்பு குப்பை: அறுவைக்காடு எடுத்து செல்லும் பணி ஆரம்பம்

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் சில நாட்களாக தேங்கிக் கிடந்த குப்பைகள் நேற்று முன்தினம் (8) இரவு முதல் அறுவைக்காடு நோக்கி எடுத்துச் செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கொழும்பு பிரதி மேயர் எம்.டி.எம் இக்பால் தெரிவித்தார். 

இதற்கமைய கொழும்பு மாநகரசபையில் சேரும் குப்பைகளை முத்துராஜவெல குப்பை கிடங்குக்கு எடுத்துச் செல்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனம் வண்ணாத்திவில்லு பிரதேச சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனூடாக அறுவைக்காட்டு பகுதிக்கு குப்பைகளை எடுத்துச் செல்வதாகவும் இந்நடவடிக்கைகளை  நேற்று முன்தினம் இரவு நேரடியாக சென்று தான் பார்வையிட்டதாகவும் அவர் கூறினார். 

முத்துராஜவெல குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லும் ஒரு மெற்றிக் டொன் குப்பைக்கு 5 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுவதுடன் அறுவைக்காடு பகுதிக்கு குப்பைகளை கொண்டு செல்வதற்கு எவ்வளவு பணம் வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இதுவரை இணக்கப்பாட்டுக்கு வரவில்லையென்றும், பத்து மெற்றிக் டொன் குப்பைகளை அறுவைக்காடு எடுத்து செல்வதற்கு போக்குவரத்து செலவுக்கென சுமார் 75 ஆயிரம் ரூபா செலவிட வேண்டி வருமென்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கொழும்பு குறூப் நிருபர் 

Sat, 08/10/2019 - 09:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை