லெபனான் தலைநகரில் விழுந்த இஸ்ரேலிய ஆளில்லா விமானம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்று விழுந்திருப்பதோடு மற்றொன்று வெடித்துச் சிதறியதாக லெபனான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொருட் சேதம் மாத்திரமே இடம்பெற்றுள்ளது.

“இரு ஆளில்லா விமானங்கள் விழுந்த பகுதிக்கு இராணுவம் உடன் விரைந்தது” என்று இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பெய்ரூட் புறநகரான தஹியாவில் இருக்கும் தமது ஊடக மையத்திற்கு சேதம் ஏற்பட்டதாக லெபனானின் போராட்ட அமைப்பான ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.

இதன்போது கடும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் வெளிநாட்டு செய்திகளுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்று இஸ்ரேல் இராணுவம் இந்த சம்பவம் குறித்து பதிலளித்துள்ளது. லெபனான் வான் பகுதிக்குள் அடிப்படி அத்துமீறி நுழையும் இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரியா மற்றும் லெமனான மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை