கந்தளாய் ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அல்-வாரிஹ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அல்-வாரிஹ் வெற்றிக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (17) கந்தளாய் பேராறு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது இறுதிப்போட்டியில் ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகமும்,அல் புருணி விளையாட்டுக் கழகமும் எதிர்தாடின இறுதியில் ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடி ஜொலி போயிஸ் விளையாட்டுக் கழகம் அல் வாரிஹ் வெற்றிக் கிண்ணத்தினையும் பணப்பரிசையும் தனதாக்கின.

வெற்றிக்கிண்ணத்தினை கந்தளாய் பிரதேச சபையின் உப தவிசாளரும்,சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம்.முதார் கலந்து கொண்டு கிண்ணத்தினை அணியின் தலைவரிடம் கையளித்தார்.

கந்தளாய் தினகரன் நிருபர்

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை