அக்கரைப்பற்றிலுள்ள வடிகான்களை துப்புரவு செய்யுமாறு வேண்டுகோள்

அக்கரைப்பற்று மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வடிகான்களில் நிரம்பியுள்ள குப்பை மற்றும் மண் போன்றவற்றை துப்புரவு செய்து நுளம்புகள் உற்பத்தியாவதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் மாநகர ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அக்கரைப்பற்று மாநகர சபை உள் வீதிகளிலும், பிரதான வீதிகளிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களுக்குள் குப்பை, மண் மற்றும் கற்களும் நிரம்பி நீர் ஓட முடியாமல் தடைப்பட்டுள்ளது.

தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதனால் நீர் வடிந்தோட முடியாமல் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பொது மக்களின் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வடிகானுக்குள் தேங்கியிருந்த நீருடன் தற்போதைய வெள்ள நீரும் சேர்ந்து பாதைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் துர் நாற்றம் வீசி வருகின்றது. அதுமாத்திரமல்லாது டெங்கு போன்ற ஆட்கொல்லி நோய்களும் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவர் முதல் முதியோர் வரை உயிராபத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

அக்கரைப்பற்று மாநகரசபை எல்லையில் உள்ள வடிகான்களினுள் நிரம்பியுள்ள குப்பை மற்றும் மண் போன்றவற்றை துப்புரவு செய்து வெள்ள நீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாநகரஆணையாளரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை