கிண்ணியா கல்வி வலயத்தில் ஆளணி பற்றாக்குறை குறித்து கலந்துரையாடல்

-கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரிய ஆளணி குறைபாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (18) நடைபெற்றது.

கிண்ணியா கல்வி வலய அதிபர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் , கல்விசார் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர் .

இதன் தொடர் நடவடிக்கையாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடி தீர்வு காண்பது என தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை கிண்ணியா கல்வி வலயத்தில் கடமை ஆற்றும் ஆசிரிய ஆளணி தொடர்பான முரண்பாடுகள் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது.

அண்மையில் நியமிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் நியமனத் தோடு இந்த நிலைமை மேலும் தீவிரம் அடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் மேலதிகமாக கடமையாற்றுவதாக கூறி கிண்ணியா கல்வி வலயத்தில் இருந்து பல ஆசிரியர்கள் ஏனைய கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலதிக ஆளணியை காரணம் காட்டி எதிர்காலத்தில் தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் ஆசிரிய நியமனங்கள் இப்பிரதேச மக்களுக்கு கிடைக்காமல் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளதாகவும், இவர்களின் இந்த நியமனமானது மேலதிக ஆளணியாக கருதப்பட வேண்டிய ஒன்றாகும் .

அதேநேரம் கணிதம், விஞ்ஞானம், தமிழ் ,தமிழ் இலக்கியம் ,போன்ற முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது .

ஆனால் கிழக்கு மாகாணத்தில் ஏனைய கல்வி வலயங்களில் மேலதிக ஆசிரிய ஆளணியினர் இருந்தபோதிலும் கூட அவை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை எனவும் புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை