சூடானில் இராணுவம் – சிவிலியன் அதிகார பகிர்வு உடன்படிக்கை

சூடானின் ஆளும் இராணுவ கெளன்சில் மற்றும் சிவில் எதிர்த்தரப்பு கூட்டணி இடையே முக்கியத்துவம் வாய்ந்த அதிகார பகிர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.

தேர்தல் மற்றும் சிவில் ஆட்சி ஒன்றை நோக்கியதாக சிவிலியன்கள் மற்றும் இராணுவ ஜெனரல்களை ஒன்றிணைத்த புதிய ஆளும் கெளன்சில் ஒன்றை அமைப்பதற்கு இந்த உடன்படிக்கையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

சூடானில் நீண்ட காலம் பதவியில் இருந்த ஒமர் அல் பஷீர் கடந்த ஏப்ரலில் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் அங்கு ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில் இராணுவ கவுன்சில் சார்பில் சூடானின் பலம் கொண்டவராக கருதப்படும் மொஹமது ஹம்தான் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் அப்தல் பத்தா அப்தல்ரஹ்மான் புர்ஹான் ஆகியோரும் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் அஹமது அல் ரபி கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில் எத்தியோப்பியா, எகிப்து மற்றும் தென் சூடான் பிரதமர்களும் பங்கேற்றனர். இதனை ஒட்டி தலைநகர வீதிகள் எங்கும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை