பொத்துவில் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி

பொத்துவில் கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (25) பொத்துவில் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பொத்துவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.புகாரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.எம்.தாஜூதீன், அக்கரைப்பற்று வலய சிறுவர் மெய்வல்லுநர் இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸ், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுதழ்கள் என்பன அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது. இவ்விளையாட்டுப் போட்டியில் பொத்துவில் கோட்டத்திலுள்ள 18பாடசாலைகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

கோட்ட மட்ட சிறுவர்

மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி - 2019 போட்டிகள் பற்றிய புள்ளி விபரம்:

 

தரம் 3 – மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் ஆண்கள் பிரிவு:

அல்-பஹ்ரியா வித்தியாலயம்

44புள்ளிகள் முதலாமிடம்

பொத்துவில் ஒஸ்மானியா

வித்தியாலயம்

39புள்ளிகள் இரண்டாமிடம்

அஸ்-ஸாதிக் வித்தியாலயம்

39புள்ளிகள் மூன்றாமிடம்

 

தரம் 3 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் பெண்கள் பிரிவு:

அல்--பஹ்ரியா வித்தியாலயம் 52புள்ளிகள் முதலாமிடம்

அஸ்-ஸாதிக் வித்தியாலயம் 46புள்ளிகள் இரண்டாமிடம்

பொத்துவில் ஒஸ்மானியா வித்தியாலயம் 42புள்ளிகள் மூன்றாமிடம்

 

தரம் 3 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் கலவன் பிரிவு:

அல்--முனவ்வறா வித்தியாலயம் 05புள்ளிகள் முதலாமிடம்

 

தரம் 4 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் ஆண்கள் பிரிவு:

தாறுல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயம் 46புள்ளிகள் முதலாமிடம்

பொத்துவில் மினாறுல் உலூம் வித்தியாலயம் 43புள்ளிகள் இரண்டாமிடம்

அஸ்-ஸாதிக் வித்தியாலயம் 41புள்ளிகள் மூன்றாமிடம்

 

தரம் 4 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் பெண்கள் பிரிவு:

அஸ்-ஸாதிக் வித்தியாலயம் 45புள்ளிகள் முதலாமிடம்

பொத்துவில் ஒஸ்மானியா வித்தியாலயம் 44புள்ளிகள் இரண்டாமிடம்

அல்--ஹுதா முஸ்லிம் வித்தியாலயம் 39புள்ளிகள் மூன்றாமிடம்

தரம் 4 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் கலவன் பிரிவு:

செங்காமம் அல்--மினா வித்தியாலயம் 18புள்ளிகள் முதலாமிடம்

கவிவானன் எம்.ஏ. அஸீஸ் வித்தியாலயம் 14புள்ளிகள் இரண்டாமிடம்

அல்-முனவ்வறா வித்தியாலயம் 14புள்ளிகள் மூன்றாமிடம்

 

தரம் 5 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் ஆண்கள் பிரிவு:

தாறுல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயம் 50புள்ளிகள் முதலாமிடம்

அஸ்-ஸாதிக் வித்தியாலயம் 49புள்ளிகள் இரண்டாமிடம்

அல்-ஹூதா முஸ்லிம் வித்தியாலயம் 42புள்ளிகள் மூன்றாமிடம்

 

தரம் 5 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் பெண்கள் பிரிவு:

பொத்துவில் ஒஸ்மானியா வித்தியாலயம் 45புள்ளிகள் முதலாமிடம்

தாறுல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயம் 40புள்ளிகள் இரண்டாமிடம்

அல்--அக்ஸா வித்தியாலயம்

38புள்ளிகள் மூன்றாமிடம்

 

தரம் 5 - மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் கலவன் பிரிவு:

அல்--முனவ்வறா வித்தியாலயம்

09புள்ளிகள் முதலாமிடம்

செங்காமம் அல்-மினா

வித்தியாலயம்

06புள்ளிகள் இரண்டாமிடம்

பாலமுனை விசேட நிருபர்

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை