பொதுத் தேவைகளுக்குரிய காணிகளை தனியாருக்கு வழங்க வேண்டாம்

கிராமத்தின் பொதுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை தனியாருக்கு வழங்காது அதனை பொதுத் தேவைக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னார் சாந்திபுரத்தில் பொது தேவைகளுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை எவ்வித முன்னறிவித்தலும் வழங்காமலும் காணிக் கச்சேரியின்றியும் அக் கிராமத்தை சாராதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் நேரடியாகச் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் நீண்ட காலமாக பொதுத் தேவைக்காக ஒதுக்கப்பட்ட காணியில் பிரத்தியேக 02 நபர்களுக்கு தலா 15 பேச் வீதம் தங்களால் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஒரு வருடத்துக்கு முன்பு இப் பகுதியில் காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும்படி என்னால் ஆலோசனை வழங்கப்பட்டபோது இந்த மக்களின் பொதுத் தேவைகளுக்காக விடப்பட்டுள்ள காணி என அன்றைய பிரதேச செயலாளரால் எமக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

ஆகவே அக் கிராமத்தின் பொதுத் தேவைக்கென ஒதுக்கப்பட்ட காணிகளை தனியாருக்கு வழங்காது பொதுத் தேவைக்கு மட்டும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தலைமன்னார் நிருபர்

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை