மன்னாரில் திருக்குறள் பெருவிழா

ஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ் திருக்குறள் பெருவிழா வடக்கு மாகாணத்தின் மூன்றாவது நாள் நிகழ்வுமன்னாரில் இன்று (25) நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் இப்பெருவிழா நடைபெற்றது

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் தலைமையில் மன். அல்அஸ்ஹர் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றபோது இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் கலந்து கொண்டார்.

இவ் விழாவின் ஆரம்பமாக மன்னார் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலையிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.வங்காலை மன்.புனித ஆனாள் மத்தியமகா வித்தியாலய மாணவர்களின் இனியத்துடன் மாணவர்கள் திருவள்ளுவர் படங்கள், கொடிகள் தாங்கிய வண்ணம் ஊர்தியுடன் விருந்தினர்கள் விழா இடம்பெற்ற இடமான மன்.அல்அஸ்ஹர் தேசிய பாடசாலை மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். விழா மண்டபத்துக்கு நுழையும் முன் திருவள்ளுவர் சிலை மற்றும் விருந்தினர்கள் பூரணகும்பம் வைத்து மங்கல ஆரார்த்தியுடன் வரவேற்கப்பட்டதுடன் திருவள்ளுவர் சிலைக்கு பிரதம விருந்தினரான வட மாகாணபிரதம செயலாளர் அ.பத்திநாதன் மாலை அணிவித்து விழாவை ஆரம்பித்து வைத்தார்.

இதைத் தொடந்து இவ் விழாவில் தலைமை மற்றும் இணைத்தலைமை மற்றும் சிறப்புரைகளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் மற்றும்செந்தமிழருவி வண மஹா தர்மகுமாரக் குருக்கள், யப்பான் கச்சுயின் பல்கலைக்கழகம் முன்னாள் ஆய்வுப் பேராசிரியர் முனைவர் மனோன்மணிசண்முகதாஸ், மன்னார் தமிழ் சங்கம் வண பிதா தமிழ்நேசன் அடிகளார் ஆகியோர் நிகழ்த்தினர்.

அத்துடன் இந்நிகழ்வில் மாணவர் உரை, திருக்குறல் கலையரங்கம் கலை நிகழ்வுகள் ஆகியனவற்றுடன் தமிழிலக்கியப் பணிகளுக்கு ஆற்றிய சேவைகளுக்காகஆறு பேர் சிறப்பு கௌரவம் பெற்றனர்.

இவ் விழாவில் இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் பௌத்த மதக் குருக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்து.

(வாஸ் கூஞ்ஞ - தலைமன்னார் நிருபர்)

Sun, 08/25/2019 - 16:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை