கிழக்கு மாகாணமட்டத்தில் வெற்றிபெற்ற மாணவருக்கு வரவேற்பு

திருகோணமலை , கந்தளாய் லீலாரட்ண விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 2019 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண மட்ட சுவட்டு மைதான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 20 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம்பாய்தல் மற்றும் உயரம் பாய்தல் நிகழ்வுகளில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடி மாணவன் ஏ.டிலக்சன் முதலாம் இடங்களைப் பெற்று தங்கப்பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டார்.வெற்றிபெற்ற பாடசாலையின் தங்க மகனை வாழ்த்தி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று அண்மையில் பாடசாலை அதிபர் கே.தம்பிராசா தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலையில் க.பொ.த.உயர்தர வர்த்தக பிரிவில் கர்லி பயின்றுவரும் இம்மாணவன் இம்மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

இவர் மண்முனை தென் எருவில்பற்று கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டி , பட்டிருப்பு வலய மட்ட விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் தொடர்ச்சியாக இரு போட்டிகளிலும் முதலிடங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

( மாளிகைக்காடு குறூப் நிருபர்)

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை