மூதூர் மேன்காமக் குளத்தை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, மேன்காமக் குளத்தைப் புனரமைத்துத் தருமாறு இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்குளம் கடந்த 2006 ஆம் ஆண்டிற்குப்பின்னர் இன்னும் புனரமைக்கப்படாததால் குளத்தில் காடுகள் பற்றைகள் வளர்ந்து குளத்தை மூடியுள்ளதோடு குளத்தின் ஆளம் குறைந்து குளம் தூர்ந்துபோய்க் காணப்படுகின்றது.

இக்குளம் பாரிய விஸ்தீரணம் கொண்டதாகும். இக்குளத்தில் பாரியளவு நீரை சேமித்துவைக்கமுடியாதிருப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இக்குளத்தை புனரமைப்பதன் மூலம் சுமார் 500 ஏக்கர் வயற்காணிக்கு இருபோகமும் நெற்செய்கை பண்ண முடியுமென இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இக்குளம் புனரமைக்கப்படாததால் காட்டுயானைகள் இக்குளத்தில் இடையூறு விளைவிப்பதாகவும் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

இக்குளத்தை புனரமைப்பதன் மூலம் கால் நடைகள் நீர் அருந்தவும் பொது மக்கள் குளித்தல் போன்ற தேவைகளுக்கு இக் குளத்து நீரை பயன்படுத்த முடியுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(தோப்பூர் தினகரன் நிருபர்)

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை