வெலிகம அறபா, கிந்தோட்டை ஸாஹிரா சிநேகபூர்வ போட்டி

வெலிகம அறபா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் காலி, கிந்தோட்டை ஸாஹிரா மத்திய கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளுக்கிடையில் திங்கட் கிழமை (5-) சினேகபூர்வ உதைப்பந்தாட்டப் போட்டிகள் வெலிகம அறபா மத்திய கல்லூரி பதியுத்தீன் மஹ்மூத் விளையாட்டுத்திடலில் இடம்பெற்றன.

14 மற்றும் 16 வயதுக்குக் கீழ் மாணவர்களுக்கிடையிலேயே இப்போட்டிகள் இடம்பெற்றன. இதில் 14 வயதுக்குக் கீழ் இடம்பெற்ற போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. எந்தஅணிக்கும் கோல் அடிக்க வாய்ப்புக் கிட்டவில்லை.

எனினும் 16 வயதுக்குக் கீழ் மாணவர்களுக்கிடையே விருவிருப்பாக இடம்பெற்ற போட்டியில் காலி கிந்தோட்டை ஸாஹிரா மத்திய கல்லூரி அணி 2 : 1 கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இச்சினேகபூர்வ விளையாட்டுப் போட்டியை வெலிகம அறபா மத்திய கல்லூரி விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பான ஸாதிக் ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெலிகம தினகரன் நிருபர்

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை