பாலமுனை மின்ஹாஜ் மஹா வித்தியாலய மாணவன் நஜீத் இரண்டாமிடம்

பாலமுனை மின்ஹாஜ் மஹா வித்தியாலய மாணவன் எம்.எம்.நஜீத் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 200மீற்றர் மற்றும் 400மீற்றர் ஓட்ட நிகழ்வுகளில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம், சான்றிதழ் பெற்றுக் கொண்டார். மாணவன் நஜீத் தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா கந்தளாய்

லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டப்பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

வெற்றி மாணவன் நஜீத் மற்றும் அவரைப் பயிற்றுவித்த பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் எம்.எம்.முபீர் ஆகியோருக்கு, மின்ஹாஜ் மகா வித்தியாலய அதிபர் கே.எல்.உபைதுல்லாஹ், அக்கரைப்பற்று கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல் ஆகியோர் தங்களது வாழ்த்து பாராட்டைத் தெரிவித்துக் கொண்டனர்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை