எபோலா சோதனை மருந்து வெற்றி: தடுப்பது சாத்தியம்

ஆட்கொல்லி எபோலா நோய்க்கு பரீட்சாத்தமாக பயன்படுத்தப்பட்ட இரு மருந்துகள் உயிர்பிழைத்தவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருக்கும் நிலையில் விரைவில் அந்த நோய் தடுக்கக் கூடிய மற்றும் சிகிச்சை அளிக்கக் கூடியதாக மாறும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வைரஸ் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசின் நோயாளர்களுக்கு நான்கு மருந்துகள் பரீட்சிக்கப்பட்டன.

இதில் முன்கூட்டி சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் சுகமடைந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மருந்துகள் கொங்கோவில் நோய் தொற்று ஏற்பட்ட அனைத்து நோயாளர்களுக்கும் பயன்படுத்தப்படும் என் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எபோலாவுக்கு எதிரான செயற்பாட்டில் இந்த முடிவுகள் சிறந்த செய்தியாகும் என்று இந்த சோதனையின் இணை அனுசரணையாளர்களான ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் தொடர்பாக அமெரிக்க தேசிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மருந்துகள் எபோலா வைரஸை தாக்கி, மனித செல்களில் அது ஏற்படுத்திய தாக்கத்தை சமநிலைப் படுத்துகிறது.

கடைசியாக 2014 தொடக்கம் 2016 வரை ஆபிரிக்காவின் ஒரு பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய எபோலா வைரஸினால் 11,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

Wed, 08/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை