முஸ்லிம், சிங்கள மக்களுடன் எதிரிகளாக வாழ்வதற்கு தமிழர்கள் விரும்பவில்லை

சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் எதிரிகளாக வாழ்வதற்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றும் இன நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் அழைப்பின் பேரில் (13) நடைபெற்ற தற்கால அரசியலை, மக்களுக்கு விளக்கும் கூட்டத்திலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

தற்போது நாட்டுக்கு ஜனாதிபதி தேர்தல் முக்கியமில்லை. புதிய அரசியலமைப்பே தேவை புதிய அரசியலமைப்பை உருவாக்கும் துணிச்சல் ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ இன்று இல்லை. எனினும் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பின்னிற்கப் போவதில்லை.

அரசுக்கு முட்டுக் கொடுப்பதை தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதையும் செய்யவில்லை என பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எண்பது வீதமான காணி,கைதிகளை இது வரை விடுதலை செய்துள்ளோம்.

தமிழ் மக்களின் அபிவிருத்திகள், புதிய அரசியல் அமைப்புக்கான பேச்சுக்களும் இடம்பெறுகின்றன.

இதேவேளை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் எம்மைச் சிலர் விமர்சிக்கின்றனர்.

அவர்களின் விமர்சனங்கள் நியாயமானது. மூன்று மாத காலம் அரசினால் காலக்கேடு வழங்கப்பட்டது. ஒரு மாதகாலக் கேடுவை நாம் வழங்வில்லை. பௌத்த குருவே வழங்கியிருந்தார்.

இன்னும் ஒருமாதத்திற்குள் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும். முஸ்லிம் மக்களின் இணக்கப்பாட்டுடனே இதைச் செய்ய வேண்டும்.இதையே நாம் விரும்புகிறோம். தூரநோக்குடன் செயற்பட்டு, தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழக்கூடிய சூழ்நிலைமைகளை உறுதிப்படுத்த வேண்டிய கடமைப்பாடு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உண்டு. தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்திருந் தாலும் அயல்நாட்டுடன் சண்டையிட்டுக் கொண்டு வாழ முடியாது. நட்பு நாடாகவே நடக்க வேண்டும். முஸ்லிம் தரப்பினர் நியாயமின்றி நடப்பார்கள் என்றால் அவர்களையும் ஒரு நிலைக்கு கொண்டுவந்து இன ஐக்கியத்துடன் வாழ்வதற்கான ஆரோக்கியமான விடங்களை தூரநோக்குடன் செயற்படுத்த வேண்டும். இல்லாது போனால் இணைந்த வடக்கு கிழக்கு என்ற இலக்கு இல்லாமல் போய்விடும். கடந்த தேர்தலில் பியசேன என்பவருக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டியது போல முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

திருக்கோவில் தினகரன் நிருபர்

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை