ஐ.நா விசேட பிரதிநிதி அகமட் சஹீட் நாளை இலங்கை வருகை

சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அகமட் சஹீட் நாளை 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

தனது 12 நாள் விஜயத்தின் போது, சஹீட் அரசாங்க அதிகாரிகள், சமய சமூகங்களின் அல்லது நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் சமூகங்களின்

பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஐ. நா ஆகிய தரப்புக்களைச் சந்திக்க உள்ளார். அவர் கொழும்புக்கு வெளியில் உள்ள இடங்களுக்கும் பயணங்களை மேற்கொள்வார். தனது இலங்கை விஜயம் தொடர்பான பூர்வாங்க அவதானிப்புகளை முன்வைப்பதற்கான ஊடகவியலாளர் மாநாடொன்று 26ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

“சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்துக்கான உரிமைகளை இலங்கை எவ்வாறு மேம்படுத்தி, பாதுகாத்து வருகின்றது என்பதனை கவனத்தில் எடுப்பேன். இந்த உரிமைகளை இலங்கை எவ்வாறு பராமரித்து வருகின்றது என்பது குறித்த ஒரு சிறந்த புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியாக அரசாங்கத்துடன் திறந்தக் கருத்துப் பரிமாற்றமொன்றை மேற்கொள்வதற்கு இந்த விஜயம் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்” என தனது இலங்கை விஜயம் குறித்து சஹீட் தெரிவித்தார்.

Wed, 08/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை