நியமனங்களில் வௌிவாரி பட்டதாரிகள் புறக்கணிப்பு

காரைதீவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்

அரச நியமனங்களின் போது வௌிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து நேற்று (04) காரைதீவில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.காரைதீவு விபுலாந்த சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

அண்மையில் வழங்கப்பட்ட 16800 பட்டதாரிகளுக்கான நியமனத்தின்போது வெளிவாரிப்பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்தே நேற்று (04) இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடந்த இவ்வார்ப் பாட்டத்தில் அரசாங்கத்தின் செயற்பாட்டைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாதைகளைத் தாங்கியவாறு ஊர்வலமும் இடம்பெற்றது.

விபுலாநந்தர் சிலை சுற்றுவட்டத்தினூடாக ஊர்வலத்தில் ஈடுபட்ட இவர்கள், உள்வாரி வெளிவாரியென. இவ்வரசாங்கம் பட்டதாரிகளை பிரித்து வேடிக்கை பார்ப்பதாகவும் கடந்த காலங்களில் இத்தகைய வேறுபாடுகள் காட்டப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்கு தலைமைதாங்கிய அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தலைவர் நசுருதீன்(யசீர்) கூறியதாவது:

உள்வாரி, வெளிவரிப்பட்டதாரிகள் என்ற பாகுபாடுகள் அன்று இருக்கவில்லை.

இன்று வேண்டுமென்றே இந்த வேறுபாட்டை அரசாங்கம் தூக்கிப்பிடித்துள்ளது. தற்போது எழுந்துள்ளநிலையில் 2012முதல் 2016வரை வெளிவாரிப்பட்டம் முடித்த சுமார்15ஆயிரம் பேர் நாட்டிலுள்ளனர். இந்த அரசாங்கம் மட்டுமே எமக்கு ஓரவஞ்சனை செய்கிறது. சந்திரிக்கா, மஹிந்தவின் காலங்களில் இப்பாகுபாடுகள் இருக்கவில்லை.இன்று இப்பாரபட்சம்வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.அவ்வாறானால் பல்கலைக்கழகங்களில் வெளிவாரிக் கற்கை நெறிகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(காரைதீவு குறூப்,பெரிய நீலாவணை தினகரன் நிருபர்கள் )

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை