சமபோஷ; ஊவா மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி

வெற்றியாளராக வெலிமட கல்வி வலயம் தெரிவு

சமபோஷ 2019 பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகளின் ஊவா மாகாணத்தின் வெற்றியாளராக வெலிமட கல்வி வலயம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டாமிடத்தை தனமல்வில கல்வி வலயமும், மூன்றாமிடத்தை பண்டாரவளை கல்வி வலயமும் வெற்றியீட்டியிருந்தன.

இந்தபோட்டிகளில் புதிய வலய சாதனைகள் 32 ஐ வீர வீராங்கனைகள் பதிவு செய்யதிருந்தனர். போட்டிகளின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது பண்டாரவளை சீவலி மகாவித்தியாலயத்தின் ஆர்.பி.ஷனில்க அயேஷ் வெற்றியீட்டியிருந்ததுடன்,சிறந்த வீராங்கனைக்கான விருதை பண்டாரவளை உயர் பெண்கள் பாடசாலையின் எச்.ஏ.ஹிமன்ஜனா தெவ்மினி வெற்றி யீட்டியிருந்தார்.

சமபோஷ ஊவா மாகாண விளையாட்டுபோட்டிகளில் 470 பாடசாலைகளின் 3565 போட்டியாளர்கள் 116 போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளின் முதல் கட்டம் ஜுலை மாதம் 8 ஆம் திகதிமுதல் 11 ஆம் திகதிவரையும், இறுதி கட்டம் ஜுலை 31ஆம் திகதி பதுளை வின்சன் டயஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்றன.

விளையாட்டு போட்டிகள் தொடர்பில் ஊவா மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் சன்ன கருணாசேன கருத்துத் தெரிவிக்கையில்,'சமபோஷ எமக்கு பூரண ஆதரவை வழங்குவதன் காரணமாக, இன்று இந்த விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக பூர்த்தியடைந்துள்ளன. எனவே,கீழ் மட்ட திறமையான மாணவர்களுக்கு அவசியமான சக்தியை வழங்கி அவர்களை சர்வதேச மட்டத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் சமபோஷ பங்களிப்பு வழங்குகின்ற மைக்காக பெருமளவு நன்றி தெரிவித்துக் கொள்ளவேண்டும்'என்றார்.

இந்ததேசியபங்களிப்புதொடர்பில் பிளென்டி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதமநிறைவேற்றுஅதிகாரியுமான ஷம்மி கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,'நாம் 10 வருடகாலமாக,பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டபோட்டிகள்,மலையகசிறுவர்கள் மற்றும் கனிஷ்ட விளையாட்டுபோட்டிகள், இராணுவ மெய்வல்லுநர் போட்டிகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுசரணைகளை வழங்கி வருகின்றோம். இதனூடாக சர்வதேச தரத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் நாம் பங்களிப்பு வழங்குகின்றோம்.'என்றார்.

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை