ஊவா ஆளுநர் மார்ஷல் பெரேரா இராஜினாமா

ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை நேற்று மாலை (வியாழக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.

இராஜினாமாவுக்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசமுள்ள ஊவா மாகாண சபையை கலைத்து ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த சு.க. முயற்சிகளை எடுத்துவரும் பின்புலத்திலேயே ஊவா மாகாண ஆளுநர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஏனைய மாகாண சபைகள் அனைத்தினதும் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் ஒக்ேடாபர் மாதம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை